செய்திகள்
விஜயேந்திரா

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு கொரோனா

Published On 2020-10-03 02:05 GMT   |   Update On 2020-10-03 02:05 GMT
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனால் அறிகுறி அற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பவர் எடியூரப்பா. இவரது இளைய மகன் விஜயேந்திரா. இவர் கர்நாடக பா.ஜனதா இளைஞர் அணி தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் விஜயேந்திராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. ஆனால் அறிகுறி அற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நான் நலமாக இருக்கிறேன். வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயேந்திரா ஏற்கனவே 2 முறை தனிமையில் இருந்தார். அதாவது அவரது தந்தை எடியூரப்பா மற்றும் சாம்ராஜ்நகர் தொகுதி எம்.பி. சீனிவாச பிரசாத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான போது, அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர் 2 முறை வீட்டு தனிமையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News