செய்திகள்
மந்திரி மாதுசாமி, எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ

கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Published On 2020-09-29 02:39 GMT   |   Update On 2020-09-29 02:39 GMT
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு, கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

துமகூரு மாவட்டம் சிக்க நாயக்கனஹள்ளி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வானவர் மாதுசாமி. இவர் எடியூரப்பாவின் மந்திரிசபையில் சட்டத்துறை மந்திரி ஆக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மாதுசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல கதக் டவுன் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எச்.கே.பட்டீல். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவரும் டாக்டர்களின் அறிவுரையின் பேரில் 10 நாட்கள் விட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற உள்ளார். இவர் முன்னாள் மந்திரி ஆவார்.
Tags:    

Similar News