செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் பாதிப்பா? மத்திய அரசு ஆய்வு

Published On 2020-09-20 19:38 GMT   |   Update On 2020-09-20 19:38 GMT
தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா மறுதொற்று குறித்த உண்மை தன்மையை அறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே ஹாங்காங், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி தொற்றில் இருந்து குணமடைந்து, சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நோய்தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் கொரோனா மறுதொற்று குறித்த உண்மை தன்மையை அறிய இது தொடர்பான தகவல்களை சேகரிப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News