செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திரமோடி

பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது? - லோக் சபையில் காங்கிரஸ் கேள்வி

Published On 2020-09-20 16:48 GMT   |   Update On 2020-09-20 16:48 GMT
பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு மத்திய சுகாதாரத்துறைக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது? என லோக் சபையில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ராஜன் சௌதிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் நன்கொடை வந்துள்ளது. இந்த நன்கொடையை கையாழுவதற்காக பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கணக்குகள் மத்திய தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வரும் நிதிகள் எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற தகவலை மக்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவர் ஆதிர் ராஜன் சௌதி பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். 

இது குறித்து பேசிய ஆதிர் ராஜன் சௌதிரி,’ கொரோனாவை
கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் கேள்வி எழுப்புகிறேன். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய சுகாதாரத்துறையும், மாநில அரசுகளும் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்றார்.

Tags:    

Similar News