செய்திகள்
வைரல் புகைப்படம்

சென்னை மினி பாகிஸ்தானாக மாறுவதாக வைரலாகும் பகீர் புகைப்படம்

Published On 2020-09-02 05:07 GMT   |   Update On 2020-09-04 05:19 GMT
சென்னை மினி பாகிஸ்தானாக மாறி வருவதாக கூறி பகீர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இரத்தம் சிந்திய காவல் துறை சீருடை மற்றும் காயமுற்ற நபரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது பெண்களை காப்பாற்ற முயன்ற தமிழக காவல் துறை அதிகாரி என்றும் இவர் முஸ்லிம் நபர்களால் தாக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

ட்விட்டரில் வலம் வரும் தகவல்களில், சென்னை மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது. துணை ஆய்வாளர் அகிலன் பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயன்ற போது போதை பொருள் உட்கொண்டிருந்த மூன்று முஸ்லிம் நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. மேலும் புகைப்படத்தில் இருப்பவர் போலீஸ் கான்ஸ்டபிள் என்பதும் அவரை தாக்கியவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

உண்மையில், சென்னை மெரினா கடற்கரையில் மது அருந்திய நபர்களை போலீஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து வெளியேற கூறினார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் போலீஸ் அதிகாரியை தாக்கினர். இந்த சம்பவம் செய்தியாகவும் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று போலீஸ் அதிகாரியை முஸ்லிம் நபர்கள் தாக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News