செய்திகள்
பல்ராம் பார்கவா

பொறுப்பற்று செயல்படுவோரால் கொரோனா பரவல் - ஐசிஎம்ஆர்

Published On 2020-08-25 13:51 GMT   |   Update On 2020-08-25 13:51 GMT
பொறுப்பற்று செயல்படுவோரால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுகிறது என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் மனித குலத்துக்கு பரிசளித்து வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் கொரோனாவின் பரவல் வேகத்துக்கு அரசுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இப்படி ஒட்டுமொத்த மனித குலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா, இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் (டாக்டர்) பல்ராம் பார்கவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் மூன்று கொரோனா தடுப்பூசிகள் முன்னணியில் உள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசி கட்டம் 2 (பி) மற்றும் கட்டம் 3 சோதனைகளில் உள்ளது மற்றும் பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசிகள் கட்டம் 1 சோதனையை நிறைவு செய்துள்ளன.

இரண்டாவது தேசிய செரோ-கணக்கெடுப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட வேண்டும். பொறுப்பற்று செயல்படுவோரால் கொரோனா பரவல் ஏற்படுகிறது.

முகக்கவசம் போன்ற விதிகளை பின்பற்றாமல் பொறுப்பற்று செயல்படுவோரே கொரோனா பரவலுக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News