செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2020-08-22 22:58 GMT   |   Update On 2020-08-22 22:58 GMT
ரபேல் விவகாரத்தில் இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட் அவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கையில் ரபேல் ஒப்பந்த விவரம் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை என்றும், அதுபற்றி தகவல்களை ராணுவ அமைச்சகம் வழங்க மறுத்துவிட்டதாகவும் பத்திரிகையில் வெளியான செய்தியை இணைத்து ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “ரபேல் விவகாரத்தில் இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது” என்று கூறி உள்ளார். அத்துடன் மகாத்மா காந்தியின், “உண்மை ஒன்று, பாதைகள் பல” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Tags:    

Similar News