செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

Published On 2020-08-14 14:37 GMT   |   Update On 2020-08-14 14:37 GMT
கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை அரசு எடுத்துள்ளது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.
டெல்லி: 

74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.  அதில் கூறியதாவது, 

கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்க அரசு எடுத்துள்ளது . கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முன்களப்  பணியாளர்களுக்கும் தலை வணங்குகிறேன். 

கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். கொரோனாவின் பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். கொரோனா காலத்தில் பிரதமரின் கரீ ப் கல்யான் திட்டம் ஏழைகளுக்கு உதவியாக இருந்தது. ஏழை மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக 2020 ஆம் ஆண்டில் நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வாழ்க்கை வாழ்வாதாரத்தை காப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News