செய்திகள்
குமாரசாமி

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: அரசுக்கு, குமாரசாமி கோரிக்கை

Published On 2020-08-11 02:54 GMT   |   Update On 2020-08-11 02:54 GMT
மழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு கூடுதல் நிவாரணத்தை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளன. கால்நடைகள் உயிர் இழப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிப்பு, மின் கம்பங்கள் முறிந்து விழுவதால் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை.

மாநிலத்தில் 3 ஆண்டுகளாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சரியான நிவாரணம் கிடைப்பதில்லை. விவசாயிகளின் துயர் துடைக்கும் அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை சரியான நிவாரண தொகையை வழங்குவதில்லை. தற்போது இந்த ஆண்டாவது மழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு கூடுதல் நிவாரணத்தை கொடுக்க வேண்டும்.

அரசு விடுவிக்கும் நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News