செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே நாளில் கொரோனாவுக்கு 390 பேர் பலி- திணறும் மகாராஷ்டிரா

Published On 2020-08-09 17:15 GMT   |   Update On 2020-08-09 17:37 GMT
மகாராஷ்டிராவில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 390 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 332  ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 390 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17,757 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,51,710 ஆக அதிகரித்துள்ளது.  மகாராஷ்டிராவில் மருத்துவமனைகளில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரத்து 558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News