செய்திகள்
கபிணி அணை

கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம்

Published On 2020-08-06 04:53 GMT   |   Update On 2020-08-06 04:53 GMT
கபிணி அணைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தின் மைசூரு மாவட்டத்தில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணை கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284.80 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும்.

இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு பகுதி விளங்குகிறது. தற்போது வயநாடு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கபினி அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News