செய்திகள்
ராயபுரம் காப்பகம்

ராயபுரம் காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவிய விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

Published On 2020-06-15 10:49 GMT   |   Update On 2020-06-15 10:49 GMT
சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காப்பாளருக்கு முதலில் கொரோனா தொற்று இருந்ததாகவும், அலட்சியமாக இருந்ததால் மற்ற சிறுவர்களுக்கும் தொற்று பரவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, காப்பகங்களில் கொரோனா தொற்று பரவியது குறித்தும், குழந்தைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்கள் என்றும், குழந்தைகள் காப்பகம் முழுவதுமாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறி உள்ளது. குழந்தைகள் காப்பகத்தில் நோய் தொற்று பரவியது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் காப்பகத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் விசாரணை ஜூலை 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News