செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

கொரோனா போர் வீரர்களை மகிழ்ச்சி அடைய செய்யவில்லை - சுப்ரீம் கோர்ட்டு வேதனை

Published On 2020-06-12 21:07 GMT   |   Update On 2020-06-12 21:07 GMT
டாக்டர்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கொரோனா போர் வீரர்களை மகிழ்ச்சி அடைய செய்யவில்லை என வேதனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தல் விவகாரம் தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘சுகாதார பணியாளர்களுக்கு தங்குமிடம், சம்பளம் வழங்கப்படாத பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் தீர்த்து வைத்திருக்க வேண்டும். நீதிமன்றங்கள் அதை தீர்ப்பதாக இருக்கக் கூடாது. சுகாதாரப் பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கூடுதல் பணத்தை செலவிடுங்கள்.

மேலும், கொரோனா போரில் மத்திய அரசு வீரர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். அதன்பின், இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News