செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு

Published On 2020-06-05 15:12 GMT   |   Update On 2020-06-05 15:12 GMT
கேரள மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ரெஸ்டாரன்ட்ஸ், மால்கள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வருகிற 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ரெஸ்டாரன்ட்ஸ், மால்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் வழிபாட்டு தலங்களை திறக்க ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வருகிற 9-ந்தேதியில் இருந்து கேரளாவில் வழிபாட்டு தலங்கள், ரெஸ்டாரன்ட்ஸ், மால்கள் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோவிலில் ஒரே நேரத்தில் 50 பேர் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மக்கள் கூட்டம் வரிசையாக செல்ல ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

மேலும், ‘‘இன்று ஒரே நாளில் 111 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,697 ஆக அதிகரித்துள்ளது. 973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றார்.
Tags:    

Similar News