செய்திகள்
உச்ச நீதிமன்றம்

கொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2020-06-05 07:05 GMT   |   Update On 2020-06-05 07:05 GMT
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான பொதுநல வழக்கில் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவிஷேக் கோயங்கா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் இருந்து தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பெரும்பாலானோர் இந்த கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அதிகபட்ச கட்டணம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கை விசாரிப்பதாகவும் கூறி உள்ளது.
Tags:    

Similar News