செய்திகள்
இலங்கை பிரதமருடன் பிரதமர் மோடி (கோப்புப் படம்)

கொரோனா தடுப்பு நடவடிக்கை - மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

Published On 2020-05-27 18:53 GMT   |   Update On 2020-05-27 18:53 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த  ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை பிரதமர் மகிந்த  ராஜபக்சேவுடன் சிறப்பான உரையாடல் நடந்தது. பாராளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினேன்.

மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News