செய்திகள்
மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்

தனிமைப்படுத்துதலை மீறுவோர் சிறையில் தள்ளப்படுவர் - மணிப்பூர் முதல்-மந்திரி எச்சரிக்கை

Published On 2020-05-24 07:44 GMT   |   Update On 2020-05-24 07:44 GMT
வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களில் தனிமைப்படுத்துதலை மீறுவோர் சிறையில் தள்ளப்படுவர் என மணிப்பூர் முதல்-மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இம்பால்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் எல்லா கொரோனா நோயாளிகளும் குணமடைந்ததால், கடந்த ஒரு மாதமாக கொரோனா இல்லாத மாநிலமாக மணிப்பூர் திகழ்ந்தது. இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 25 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, விதிமுறைகளை மீறுவோருக்கு மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-



வெளிமாநிலம், நாடுகளில் இருந்து வருபவர்கள், பரிசோதிக்கப்படுவார்கள். தொற்று இல்லாதவர்கள், வீடுகளில் கட்டாய தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதை மீறி வெளியே வருபவர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News