செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

புயலில் பந்தாடப்பட்ட கடை - வைரல் வீடியோ அம்பன் புயலின் கோர காட்சிகளா?

Published On 2020-05-22 04:51 GMT   |   Update On 2020-05-22 04:54 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ அம்பன் புயலின் கோர காட்சிகளா என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




மேற்கு வங்க மாநிலத்தில் கோர தாண்டவம் ஆடிய அம்பன் புயல் பல உயிர்களை பலிகொண்டது. இதுதவிர கடுமையான புயல் மற்றும் மழை காரணமாக பயிர்களும், உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளது. இதனிடையே, அம்பன் புயலின் போது எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு வைரலாகும் வீடியோ ஒன்றில், பார்க்கிங் பகுதி ஒன்றின் அருகில் இருந்த கடை காற்றில் அடித்துக்கொண்டு பறக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. மேலும் இந்த வீடியோ அம்பன் புயலின் கோர காட்சிகள் என்றும் கூறப்படுகிறது. 



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது கடந்த ஆண்டு ஒடிசாவை தாக்கிய ஃபானி புயலின் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. வைரல் வீடியோவின் முழு பதிப்பு யூடியூபில் மே 2019 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ ஃபானி புயலின் போது எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் வைரல் வீடியோ அம்பன் புயலின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. ஒடிசாவில் ஃபானி புயல் கடந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி துவங்கி மே 5 ஆம் தேதி வரை நீடித்தது. ஃபானி புயல் காரணமாக அம்மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News