செய்திகள்
ராகுல் காந்தி

நிவாரணத் தொகுப்பை மாற்றியமைக்க வேண்டும்- பிரதமருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

Published On 2020-05-16 07:01 GMT   |   Update On 2020-05-16 07:01 GMT
கொரோனா நிவாரணத் தொகுப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும், மக்களுக்கு நேரடியாக பணம் கிடைக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இணையதளம் வாயிலாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கால் தொழிலாளர்கள் நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டி உள்ளது. நெருக்கடியான இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பணம் தேவை. எனவே, பிரதமர் மோடி அறிவித்துள்ள நிவாரணத் தொகுப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

நேரடி வங்கி பரிமாற்றம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிப்பது மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவதை பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் இந்த மக்கள் தான் நமது எதிர்காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News