செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பெண் என்றும் பாராமல்.... வைரலாகும் திமுக நிர்வாகி வீடியோ

Published On 2020-05-12 04:48 GMT   |   Update On 2020-05-12 04:48 GMT
திமுக நிர்வாகி ஒருவர் பெண்மணியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



திமுக நிர்வாகி ஒருவர் பெண்மணியை கொடூரமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வைரல் வீடியோவில் தாக்கப்பட்டது பெண் மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் வேட்டி சட்டை அணிந்த நபர் பெண்மணியை கொடூரமாக தாக்குவதும், அங்கிருந்தவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அறையினுள் நாற்காலிகள் கீழே விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. வைரல் வீடியோவில் சத்தமான இசை சேர்க்கப்பட்டுள்ளது. 

வைரல் பதிவுகளில் திமுக நிர்வாகி செல்வ குமார் பணியில் ஈடுபட்ட மருத்துவரை எட்டி மிதிக்கிறார் எனும் தலைப்பிடப்பட்டுள்ளது. இவர் தண்டிக்கப்படும் வரை வீடியோவை பகிருங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அந்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தாக்கப்படும் பெண், மருத்துவர் இல்லை என்பதும் உறுதியாகிள்ளது. 2018 இல் சிசிடிவி வீடியோ வைரலானதும் திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அந்த வகையில், வைரல் பதிவுகளில் பழைய வீடியோவிற்கு புதிய தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான பெண், மருத்துவர் இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News