செய்திகள்
அஜித்பவார்

வீட்டில் இருந்தே ரம்ஜான் தொழுகை: துணை முதல்-மந்திரி அஜித்பவார் வேண்டுகோள்

Published On 2020-04-24 03:35 GMT   |   Update On 2020-04-24 03:35 GMT
முஸ்லிம் சகோதரர்கள் தொழுகையை பொது இடத்திலோ அல்லது மசூதிகளிலோ மேற்கொள்ளக்கூடாது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவர்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகை செய்யவேண்டும் என்று அஜித்பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை :

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரம்ஜான் பண்டிகையை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு துணை முதல்-மந்திரி அஜித் பவார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளில் முஸ்லிம் சகோதரர்கள் தொழுகையை பொது இடத்திலோ அல்லது மசூதிகளிலோ மேற்கொள்ளக்கூடாது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவர்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகை செய்யவேண்டும். வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையே வெற்றியை பெற உதவும். ஊரடங்கு சட்டத்தை முஸ்லிம்கள் பெரிதும் மதித்து நடந்து வருகின்றனர். ரம்ஜான் மாதத்திலும் இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் அஜித்பவார் கூறுகையில், ‘‘மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ் துறையினர், அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் கடமையை செய்யும் அதே நேரத்தில் அவர்கள் தங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னமும் சிலர் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் தெருக்களில் அலைந்து திரிவதே வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அவர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News