search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித்பவார்"

    • மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.
    • முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர அரசியலில் கடந்த 2-ந் தேதி நடந்த திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தனர்.

    அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான், வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அஜித்பவார் அந்த பதவியில் அமர்த்தப்படுவார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாயுதி கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் என்ற முறையில் அஜித்பவார் மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியாக ஆகமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    தேசியவாத காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்களுடன் மகாயுதி கூட்டங்கள் நடந்தபோதே அஜித்பவாருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காது என்று தெளிவாக எடுத்து கூறப்பட்டு உள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே எப்போதும் போல முதல்-மந்திரியாக நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது.

    அதிகார பகிர்வு குறித்து அஜித்பவாருக்கு தெளிவாக கூறப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டதுடன், மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.

    மகாயுதி கூட்டணி குறித்து மக்களை குழப்புவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் தலைவர்களுக்கு இடையே எந்த குழப்பம் இல்லை. ஆனால் தொண்டர்கள் குழம்பி உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏதாவது நடக்குமானால் அது மந்திரிசபை விரிவாக்கமாக இருக்கும். இதற்கு முதல்-மந்திரி அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவாரின கூட்டணியில் இணைந்தது தனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஏக்நாத் ஷிண்டே முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • துணை முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னதாக கட்சி குறித்து தேர்தல் கமிஷனுக்கு தகவல்
    • யாருக்கும் கூட்டத்தை கூட்ட அதிகாரிம் கிடையாது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார்.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற சண்டை தற்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று டெல்லியில் சரத்குமார் தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது 82 வயது ஆனாலும் 93 வயதானாலும் தான் உத்வேகத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே அஜித் பவார், பதவியேற்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னதாகவே தேசிய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி குறித்து கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய சரத் பவார், இந்திய தேர்தல் ஆணையம் தங்களுக்கு தகவல் தெரிவிக்க தவறிவிட்டது என விமர்சனம் செய்துள்ளார். இதனால் தேர்தல் கமிஷன் சரத்பவாருக்கு தகவல் தெரிவிக்கும் என தெரிகிறது.

    அதேவேளையில் அஜித் பவார், சட்டப்பூர்வமாக இந்த செயற்குழு கூட்டியது சரியல்ல எனது விமர்சனம் செய்துள்ளார். கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் விவாதம் உள்ளபோது, அதன் பிரத்யேக வரம்பிற்குள் யாருக்கும் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.

    அஜித் பவார் தலைமையிலான கூட்டணி தேசிவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில 40 கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.எல்.ஏ.-க்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

    தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்னர். மூன்றில் இரண்டு பகுதியான 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அஜித் பவாருக்கு தேவை. இதுவரை அஜித் பவாருக்கு 32 எம்.எல்.ஏ.க்களும், சரத் பவாருக்கு 14 எம்.எல்.ஏ.-க்களும் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

    • இப்போது நான் வலுவாகிவிட்டேன்.
    • எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    மும்பை :

    ஒய்.பி. சவான் அரங்கில் சரத்பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னையோ அல்லது வேறு எந்த நபரையோ ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் என் தந்தைக்கு எதிராக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். கட்சி தொண்டர்களுக்கு அவர் தந்தையை விட மேலானவர்.

    நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் இதேபோன்று பதவியேற்றப்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் இப்போது நான் வலுவாகிவிட்டேன். என்னை பலப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எங்கள் உண்மையான போராட்டம் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறைக்கு எதிராக இருக்கும். எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    நான் சிறிய வேதனை தரக்கூடிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு பெண் தான். ஆனால் நேரம் வந்தால் பெரிய மோதலுக்கு தயாராகும் வகையில் சத்ரபதி சிவாஜியின் தயார் ஜிஜாவாகவும், மராட்டிய பெண் ஆட்சியாளர் அகில்யாபாயாகவும் என்னை மாற்றிக்கொள்வேன்.

    தந்தைக்கு வயதாகி விட்டதாக கூறி வீட்டிற்குள் முடங்க வைக்க முயற்சிக்கும் மகன்களை விட மகள்களாகிய நாங்கள் மிக சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவார் நேற்று தனது உரையின்போது சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அவரை ஓய்வெடுக்குமாறு வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    சரத்பவாரின் அணியில் இருக்கும் முக்கிய தலைவரான ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், "அஜித்பவார் சமீபத்தில் கட்சியின் மாநில தலைவராக விருப்பம் இருப்பதாக கூட்டத்தில் பேசினார். கட்சியில் சில உள் விவகாரங்களை பொது மேடையில் பேசக்கூடாது என்று தெரிந்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அஜித்பவார் எனது காதில் அவரது ஆசையை கிசுகிசுத்திருந்தால் கூட நான் அவருக்கு பதவியை கொடுத்திருப்பேன். சரத்பவார் ஒரே ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அனைவரும் முன்பே பார்த்து இருப்பீர்கள்.

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் காரட் மற்றும் சத்தாராவில் நடத்திய பொதுக்கூட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில் அவரது தாக்கத்தை நீங்கள் (அஜித்பவார் அணி) உணர்வீர்கள்" என்றார்.

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.
    • பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் இரு அணியினரும் நேற்று தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி கூட்டம் நடத்தினர்.

    மும்பை பாந்திராவில் அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளித்தனர்.

    இந்தநிலையில் கூட்டத்தில் சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அஜித்பவார் பேசியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் அவரவர் இன்னிங்ஸ் இருக்கிறது. அதிக உழைக்கும் திறன் கொண்ட வயது 25 முதல் 75 வரை ஆகும்.

    2004-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பை இழந்ததற்கு சரத்பவார் தான் காரணம். அந்த ஆண்டு காங்கிரசை விட தேசியவாத காங்கிரசிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் சரத்பவார் காங்கிரஸ் கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். எங்களை பொறுத்தவரை சரத்பவார் கடவுளை போன்றவர். அவர் மீது எங்களுக்கு ஆழமான மரியாதை உள்ளது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில் கூட பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை இதற்கு உதாரணமாக பார்க்கலாம்.

    உங்களுக்கு (சரத்பவார்) தற்போது வயது 83, நீங்கள் நிறுத்தப் போவதில்லையா? எங்களுக்கு உங்களின் ஆசியை வழங்குங்கள், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அஜித்பவார் கூறினார்.

    அஜித்பவாருக்கு 63 வயது ஆகிறது. இவர் சரத்பவாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று களத்தில் இறங்குகின்றனர்.
    • அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது.

    இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

    இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை நீக்கி, அவருக்கு பதிலாக மாநில தலைவராக சுனில் தட்காரேயை நியமித்தது. மேலும் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளது.

    தங்களுக்கு 40 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறிவருகிறது. இதேபோல பதவி ஏற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணியில் இருப்பதாக சரத்பவார் அணி கூறியுள்ளது. எனினும் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியாமல் உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நேற்று கூறுகையில், "அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. கட்சி உடைந்தது தொடர்பாகவும் யாரும் மனு கொடுக்கவில்லை. அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜெயந்த் பாட்டீல் மனு கொடுத்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை" என்றார்.

    அஜித்பவாருக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல சரத்பவாருக்கு ஆதரவாக ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், ரோகித் பவார், ராஜேஸ் தோபே, அனில் தேஷ்முக், பாலாசாகேப் பாட்டீல் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 15 எம்.எல். ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்குகின்றனர். இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    சரத்பவார் நடத்தும் கூட்டம் மதியம் 1 மணிக்கு ஒர்லியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அஜித்பவார் நடத்தும் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில தலைவர் சுனில் தட்காரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற உள்ள இரு அணிகளின் கூட்டங்கள் மூலம் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவர உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பலம் அதிகம் உள்ள அணிகள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே துரோகம் செய்தவர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

    தெற்கு மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட அஜித்பவார் அணியின் புதிய அலுவலகத்தில் சரத்பவாரின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது.
    • இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-

    நாடு சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகை 35 கோடியாக இருந்ததாக எனது தாத்தா என்னிடம் அடிக்கடி கூறுவார். ஆனால் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. சீனாவை முந்தி விட்டோம். இதற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு.

    நமது நாடு, மாநிலங்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நிறுத்த வேண்டும்.

    மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 3 குழந்தைகளை பெற்றால் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது இந்த முடிவுக்காக நாங்கள் பயந்தோம்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஏன் இது போன்ற முடிவை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், அது எங்கள் கையில் இல்லை. அது மத்திய அரசின் கையில் உள்ளது. அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.

    2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டால், மக்கள் இந்த விவகாரத்தில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×