செய்திகள்
உத்தவ் தாக்கரே

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி- உத்தவ் தாக்கரே

Published On 2020-04-18 03:38 GMT   |   Update On 2020-04-18 03:38 GMT
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரா அரசுடன் மக்களும் இணைந்துள்ளனர். இதுவரை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
மும்பை :

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வைரஸ் நோயால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பலர் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதுவரை ரூ.245 கோடி முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடை கிடைத்திருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரா அரசுடன் மக்களும் இணைந்துள்ளனர். இதுவரை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது தவிர உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளும் கிடைத்துள்ளன. இவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News