செய்திகள்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. அமீனுல் இஸ்லாம்

கொரோனா மருத்துவம் குறித்து விமர்சனம் - அசாம் எம்.எல்.ஏ. திடீர் கைது

Published On 2020-04-08 09:25 GMT   |   Update On 2020-04-08 09:25 GMT
கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுதும் முகாம்களை கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பாக அசாம் எம்.எல்.ஏ. அமீனுல் இஸ்லாம் போலீசார் கைது செய்தனர்.

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. அமீனுல் இஸ்லாம்.

இவர் கொரோனா வைரஸ் நோய்தொற்று சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுதும் முகாம்களை கடுமையாக விமர்சித்துள்ளார். தடுப்பு முகாமை விட மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான அமீனுல் கூறியிருந்தார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில் போலீசார் எம்.எல்.ஏ. விடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர் . அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News