செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்படும் - முதல் மந்திரி கெஜ்ரிவால்

Published On 2020-03-12 12:33 GMT   |   Update On 2020-03-12 12:33 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 4,635 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. அதை தொடர்ந்து கேரளா, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இன்று 73 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

இதுதொடர்பாக, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படுகின்றன.

தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News