செய்திகள்
அஜித்பவார்

கை குலுக்க வேண்டாம்- நமஸ்தே சொல்லுங்கள்: அஜித்பவார் அறிவுரை

Published On 2020-03-09 01:53 GMT   |   Update On 2020-03-09 01:53 GMT
கொரோனா வைரஸ் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் சந்திக்கும் போது கை குலுக்குவதற்கு பதிலாக நமஸ்தே சொல்லுங்கள் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவுறுத்தி உள்ளார்.
மும்பை :

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நமது நாட்டில் இந்த நோயால் இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் இந்த நோய் தாக்குதல் யாருக்கும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கை குலுக்குவதற்கு பதிலாக நமஸ்தே என்று சொன்னால் போதும் என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



எனக்கு தூய்மை பிடிக்கும். அழுக்கு பிடிக்காது. தற்போது யாராவது கைகுலுக்க வந்தால் நான் வணக்கம் (நமஸ்தே) தெரிவிப்பதை நீங்கள் இன்று பார்த்திருக்கலாம். நான் துணை முதல்-மந்திரி ஆகிவிட்டதால் இப்போது நான் கைகுலுக்கவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த சுகாதார நெருக்கடி நீங்கும் வரை கைகுலுக்காமல் நமஸ்தே சொல்வது அனைவருக்கும் நலம்.

இவ்வாறுஅவர் கூறினார்.
Tags:    

Similar News