செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

பள்ளி விழாவில் கெஜ்ரிவால் பங்கேற்க ஆட்சேபனை இல்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

Published On 2020-02-24 08:17 GMT   |   Update On 2020-02-24 08:17 GMT
மெலனியா டிரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி விழாவில் கெஜ்ரிவால், சிசோடியா பங்கேற்க ஆட்சேபனை இல்லை என்று அமெரிக்க தூதரகம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக தனது மனைவி மெலனியாவுடன் இன்று குஜராத் வந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள பள்ளிக்கு மெலனியா செல்கிறார். டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி நிறுவனருமான கெஜ்ரிவாலின் அரசு அறிமுகப்படுத்தி உள்ள மகிழ்ச்சி பாடத்திட்ட வகுப்பை அவர் அந்த பள்ளியில் பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மெலனியாவுடன் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா ஆகியோரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் இருவரின் பெயர்களும் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் மெலனியா டிரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி விழாவில் கெஜ்ரிவால், சிசோடியா பங்கேற்க ஆட்சேபனை இல்லை என்று அமெரிக்க தூதரகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரி கூறியதாவது:-

அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் டெல்லி அரசு பள்ளிக்கு செல்லும் போது முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரி மனீஷ் சிசோடியா ஆகியோர் பங்கேற்க எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் இது அரசியல் நிகழ்வு அல்ல என்று அங்கீகரித்தது பாராட்டுதலுக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News