செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

Published On 2020-02-18 16:19 GMT   |   Update On 2020-02-18 16:19 GMT
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிவகங்கை தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

சிவகங்கை தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல இரண்டு வாரம் அனுமதி கோரி இருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கி  உத்தரவிட்டது. மேலும், அவரது பயணத்தின் விவரங்களின் நகலை சிபிஐயிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Tags:    

Similar News