என் மலர்

  நீங்கள் தேடியது "Karti Chidambaram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது.
  • கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  சென்னை:

  பஞ்சாப் மாநிலம், பனவாலா என்ற பகுதியில் வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். நிறுவனம் அமைத்து வந்த 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல்மின் நிலையத்தில், தொழில்நுட்ப பணிகளை சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.

  இப்பணிக்கு மேலும் தொழில் நுட்பப் பணியாளர்களை சீனாவில் இருந்து அழைத்து வருவதற்காக டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் துணைத் தலைவர் விகாஸ் மஹாரியா, கார்த்தி சிதம்பரத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாஸ்கர ராமனை அணுகினார்.

  இந்த முறைகேடு நிகழ்ந்த 2011-ம் ஆண்டு கால கட்டத்தில் கார்த்தியின் தந்தை சிதம்பரம் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தார்.

  விகாஸ் அந்த திட்டத்தில் பணி செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களை, அரசின் விதிமுறைகளை மீறி மறுசுழற்சி முறை அடிப்படையில் மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

  இதற்காக கார்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து டெல்லி சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது கூட்டுச் சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

  இந்த வழக்குத் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  இந்த நிலையில் சி.பி.ஐ. வழங்கிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி அமலாக்கத்துறையினர் ஒரு வழக்கை கடந்த மே 25-ந்தேதி பதிவு செய்தனர். இதில் சி.பி.ஐ. வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அனைவரும் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.

  இதையடுத்து இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில் டெல்லி அமலாக்கத்துறையினர் சென்னையில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் தொழில் அதிபர் ரமேஷ் துஹார் வீட்டிலும் நடைபெற்றது.

  இதே போல எழும்பூர் மார்ஷல் சாலையில் ரமேஷ் துஹார் நடத்தும் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களிலும், தியாகராய நகரில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திலும், ஒரு வர்த்தக சங்கத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.

  பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறையினர் கூற மறுத்து விட்டனர்.

  சில ஆவணங்களில் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார்த்தி சிதம்பரம் வீட்டில் மே மாதம் 17- ம் தேதி ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

  சென்னை:

  முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடைபெற்றது.

  இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
  • கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

  புதுடெல்லி:

  263 சீனர்களுக்கு சட்ட விரோத விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இதற்கிடையே அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

  இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான இடைக்கால தடை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
   புதுடெல்லி:

  ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    
  இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.   இருவரையும் கைது செய்வதற்கான தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

  அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
  மதுரை:

  சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சிவகங்கை தொகுதி மேம்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் ஏற்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பாராளுமன்றத்தில் செயலாற்றும்.

  தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை.  காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் கேரளாவில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. வட மாநிலங்களில் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமான ஒன்று தான். காங்கிரஸ் காரிய கமிட்டி தோல்விக்கான காரணம் குறித்து ஆராயும்.

  காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையம் அமைத்த உத்தரவை மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

  நாட்டில் எதிர்க்கட்சி என்பதே இல்லை. ஒரு அரசாங்கம் மட்டும் தான் இருக்கிறது. என்னை கட்சி சார்பாக பார்க்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்று தான் பார்க்க வேண்டும்.

  அரசாங்கம் கட்சி சார்பை விடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும்.

  ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்பது தான் எங்களின் ஒருமித்த கருத்தாகும். அவரே கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரத்துக்கு, தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
  புதுடெல்லி:

  ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
   
  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

  இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அனுமதி அளிக்கும்படி கூறியிருந்தார்.   இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை ஏற்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

  இதற்கிடையே, தான் ஏற்கனவே நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்திய பிணைத்தொகை 10 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டும் எனக்கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுரை வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு எப்போதும் என்னை மிரட்ட முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
  புதுக்கோட்டை:

  சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் நேற்று புதுக்கோட்டையில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சிவகங்கை தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வாங்கி உள்ள ஓட்டுகள் தான் கூட்டணி கட்சி உடைய ஓட்டு வங்கி என்று கருதக்கூடாது. ஓட்டு வங்கி மக்களின் மனநிலையை பொறுத்து மாறும், தற்போது வாங்கி உள்ள வாக்குகளை தக்க வைக்கும் வகையில் கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும்.

  காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளை புறக்கணிப்பு செய்து நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் இயக்கத்திற்கு இளைஞர்கள் வாக்குகளை அளித்து உள்ளனர். அந்த வாக்குகளை உதாசீனமாக எடுத்து விடக் கூடாது.  என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு என்னை எப்போதும் மிரட்ட முடியாது. தேர்தல் பிரசாரத்தின்போது கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததால் வாக்குகள் பெற்றும், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை.

  அதை பெறுவதற்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசிடம் நான் வலியுறுத்துவேன். ராகுல்காந்திதான் என்றைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பார். ரஜினிகாந்த் கூறிய கருத்து என்ன என்று எனக்கு தெரியவில்லை. வரும் காலங்களில் நோட்டா என்ற ஒன்று இருக்க கூடாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் எச்.ராஜாவை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வெற்றியை நெருங்கினார்.
  சிவகங்கை:

  பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

  சிவகங்கை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருந்தார். மாலை 5 மணி நிலவரப்படி அவர் 3,11,007 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் எச்.ராஜா 1,30,063 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்தார்.

  அமமுக வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி 66 ஆயிரத்து 950 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சக்திபிரியா 37 ஆயிரத்து 717 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 14 ஆயிரத்து ஒரு வாக்குகளும் பெற்றிருந்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அரசுதரப்பு சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சி.பி.ஐ. இன்று தெரிவித்துள்ளது. #CBInoobjection #IndraniMukerjea #INXmedia #KartiChidambaram
  புதுடெல்லி:

  மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் தான் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது.

  மேற்படி பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கான தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக மத்திய முன்னாள் நிதி மந்திரியான தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்திஉதவி செய்ததாக குற்றச்சாட்டு  எழுந்தது.

  இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.

  இந்த விவகாரத்தில் கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்விரு வழக்குகளின் விசாரணையும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில், ஷீனா போரா கொலை வழக்கில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக முன்னர் மனு செய்திருந்தார்.

  இந்நிலையில், டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது  இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மறுவிசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #CBInoobjection #IndraniMukerjea #INXmedia #KartiChidambaram
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்செல் மேக்சிஸ் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதித்திருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
  புதுடெல்லி:

  ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

  இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

  கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  இந்த தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இவ்வழக்கு தொடர்பாக சிங்கப்பூரில் இருந்து கிடைக்க வேண்டிய தகவல் இன்னும் வந்து சேராததால் 4 வாரகால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.

  இதைதொடர்ந்து,  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மே 6-ம்  தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினம் இவ்வழக்கின் மறுவிசாரணை நடைபெறவுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  7-வது முறையாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார். #Loksabhaelections2019 #PChidambaram
  காரைக்குடி:

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று காலை வாக்களித்தார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகம் மற்றும் இந்தியாவில் நாம் விரும்புகின்ற மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்காக வாக்களித்துள்ளேன். இதேபோல் தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

  சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம்,சாதி, மத வேறுபாடு இல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம், தமிழின மாண்பு போன்றவற்றை காப்பாற்றுவதற்காக தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

  வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி, தாயார் நளினி ஆகியோருடன் வாக்களித்தார்.

  மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் வெல்லும். கடந்த 1971, 80, 96, 98, 2004, 2009 ஆகிய 6 முறை இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது 7-வது முறையாக வெற்றி பெறும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தொடர்ந்து சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது மனைவி ஸ்ரீநிதி, தாயார் நளினி ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்தினார். #Loksabhaelections2019 #PChidambaram
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print