செய்திகள்
எடியூரப்பா

மந்திரி பதவி கேட்டு மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி- சமாதான முயற்சியில் எடியூரப்பா

Published On 2020-02-07 06:25 GMT   |   Update On 2020-02-07 06:25 GMT
கர்நாடக மாநிலத்தில் மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி எடிரப்பா ஈடுபட்டுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று 10 மந்திரிகள் புதிதாக பதவி ஏற்றனர். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்து பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இன்னும் 6 மந்திரி பதவி இடங்கள் காலியாக உள்ளன.

மாற்று கட்சியில இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்துவிட்டு மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தராமல் புறக்கணித்த எடியூரப்பாகவுக்கு பா.ஜனதாவில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. மந்திரி பதவி கேட்டு மூத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவை மூத்த மந்திரிகள் ஈஸ்வரப்பா, ஸ்ரீராமுலு, எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் லிம்பாவளி, உமேஷ்கத்தி, முருகேஷ் நிரானி, முன்னாள் மந்தரி யோகேஸ்வர் உள்பட பலர் புறக்கணித்தனர்.

மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி எடிரப்பா ஈடுபட்டுள்ளார்.



காலியாக உள்ள 6 மந்திரி பதவி இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார்கட்டீல் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை தக்கவைக்க எடியூரப்பா சாகசம் மேற் கொள்ளவேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியை கவிழ்ப்பதிலும் தக்கவைத்துக் கொள்வதிலும் முதல்-மந்திரி எடியூரப்பா நிபுணர் என்றாலும் இந்த முறை அவரது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் சாகசம் புரிய வேண்டும்.

கட்சிக்கு புதிதாக வந்தவர்கள் மந்திரியாகி உள்ள நிலையில் ஏற்கனவே அந்த கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

விரைவில் மாநில பா.ஜனதாவில் கலகம் ஏற்பட்டு ஆட்சிக்கு ஆபத்து நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News