செய்திகள்
மகிந்த ராஜபக்சே

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை

Published On 2020-02-07 02:35 GMT   |   Update On 2020-02-07 02:35 GMT
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியை ராஜபக்சே சந்திக்கிறார்.
புதுடெல்லி

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இலங்கை பிரதமராக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியா வருகிறார்.

இன்று மாலை டெல்லி வரும் அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியை ராஜபக்சே சந்திக்கிறார். அப்போது, இரு நாட்டு உறவு, மீனவர்கள் பிரச்சினை, போன்றவை குறித்து விரிவாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வார் என்று இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயணத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் 10 பேர் கொண்ட ஒரு குழுவும் வருகிறது. 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் ராஜபக்சே, 11-ந்தேதி இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
Tags:    

Similar News