செய்திகள்
ராகுல் காந்தி

பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

Published On 2020-02-03 02:10 GMT   |   Update On 2020-02-03 02:10 GMT
ராகுல் காந்தி பிரதமர் மோடி உடற்பயிற்சி செய்யும் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு உங்கள் வழக்கமான மந்திர உடற்பயிற்சியை இன்னும் கொஞ்ச நாள் கூட செய்யுங்கள். ஒருவேளை இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.
புதுடெல்லி :

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் மோடியை அவர் கிண்டல் செய்திருந்தார்.

பிரதமர் மோடி உடற்பயிற்சி செய்யும் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த அவர், அதில், ‘அன்பான பிரதமரே, உங்கள் வழக்கமான மந்திர உடற்பயிற்சியை இன்னும் கொஞ்ச நாள் கூட செய்யுங்கள். உங்களுக்கு தெரியாது, ஒருவேளை இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்’ என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக மத்திய பட்ஜெட்டையும் நேற்று முன்தினம் அவர் விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நாட்டின் இன்றைய முக்கிய பிரச்சினையே வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார மந்தநிலையும்தான். ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலோ, இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையிலோ எந்தவொரு உறுதியான யோசனைகளும் பட்ஜெட்டில் இல்லை’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News