செய்திகள்
பாராளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன்

2020-21 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் பாராளுமன்றம் வந்தடைந்தார்

Published On 2020-02-01 05:10 GMT   |   Update On 2020-02-01 05:10 GMT
2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றம் வந்தடைந்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்  மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்தார்.

2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துரை மந்திரி அமித்ஷா உள்பட மந்திரிகள் பலர் பாராளுமன்றம் வந்தடைந்தனர்.

வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி அமைச்சர்கள்  சூட்கேசில் எடுத்து வருவார்கள். ஆனால் கடந்த முறை சூட்கேசுக்கு ‘பை பை’சொன்ன நிர்மலா சீதாராமன்..!  அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் ஆவணங்களை எடுத்து சென்றார். அதுபோலேவே இன்றும்   அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் கொண்டு வந்தார்.
Tags:    

Similar News