செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன்

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு

Published On 2020-01-30 05:05 GMT   |   Update On 2020-01-30 05:05 GMT
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், ஆட்சியைப்பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிகு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. 

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.  அதில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமின்ற அனைத்து ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வாக்களிக்கும் என கூறி உள்ளார். 



‘ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள், ராஜேந்திர நகர் தொகுதியின் வேட்பாளர் ராகவ் சதாவுக்கு வாக்களியுங்கள். இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லியில் போட்டியிடும் அனைத்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள்’ எனவும் டெரின் ஓ பிரையன் டுவிட்டரில் பதிவிட்டுளள்ர்.
Tags:    

Similar News