செய்திகள்
பாலியல் பலாத்கார குற்றங்கள்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 80 கொலைகள், 91 பாலியல் பலாத்கார குற்றங்கள்

Published On 2020-01-10 02:20 GMT   |   Update On 2020-01-10 02:20 GMT
இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 கொலைகள் மற்றும் 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
புதுடெல்லி :

கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி அந்த ஆண்டில் இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 கொலைகள் மற்றும் 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.

ஆண்டு முழுவதும் 29 ஆயிரம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இது முந்தைய ஆண்டைவிட 1.3 சதவீதம் அதிகமாகும். பெரும்பாலும் அதிகபட்சமான கொலைகள் சொத்து தகராறு, பழிக்குப்பழி வாங்குதல் மற்றும் ஆதாயத்தை கருதும் நோக்கத்துடன் நடந்து இருக்கின்றன.



33 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக முந்தைய 2017-ம் ஆண்டைவிட 19 ஆயிரம் வழக்குகள் அதிகரித்து 3 லட்சத்து 78 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

இதேபோல் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக 1 லட்சத்து 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.

2018-ம் ஆண்டில் மொத்தம் 50 லட்சத்து 74 ஆயிரம் கொடுஞ்செயல் குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. முந்தைய ஆண்டில் 50 லட்சத்து 7 ஆயிரம் கொடுஞ்செயல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News