செய்திகள்
பிரதமர் மோடி,

பிரதமர் மோடி இருநாள் பயணமாக கர்நாடகா செல்கிறார்

Published On 2020-01-01 15:31 GMT   |   Update On 2020-01-01 15:31 GMT
பிரதமர் மோடி இருநாள் பயணமாக கர்நாடகா செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக கர்நாடக மாநிலம் செல்கிறார். ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் கர்நாடகா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

முதல் நாளான நாளை தும்கூரு மாவட்டத்துக்கு செல்கிறார். தும்கூரு செல்லும் பிரதமர் மோடி, முதலில் ஸ்ரீ சித்தகங்கா மடத்துக்கு செல்ல உள்ளார்.

இதையடுத்து, கர்நாடக மாநில விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News