செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வைரல் வீடியோவில் தாக்கப்படுவது இஸ்லாம் மதத்தினரா?

Published On 2019-12-31 07:09 GMT   |   Update On 2019-12-31 07:09 GMT
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் தாக்கப்படுவது இஸ்லாம் மதத்தினர் என கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மையை பார்ப்போம்.



இலங்கை சிறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் போலி தலைப்பில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவிற்கு, ‘அசாம் தடுப்பு காவல் மையத்தில் முல்லீம்கள் தாக்கப்படும் காட்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவினை ஃபேஸ்புக்கில் பலர் பகிர்ந்து வருவதோடு, இதனை இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருக்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்த வீடியோ சமூக வலைத்தள வாசிகள் மத்தியில் வைரலாகியுள்ளது. மேலும் முஸ்லீம்கள் சட்டவிரோத முறையில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



இணைய தேடல்களில் இந்த வீடியோ நவம்பர் 22, 2018 இல் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றிய செய்தி ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த வீடியோ இலங்கையில் உள்ள சிறையில் எடுக்கப்பட்டதாகும்.

உண்மையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மீது சிறை காவலர்கள் தாக்குகின்றனர் என்ற தலைப்பில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News