செய்திகள்
பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் ஏன்? - மத்திய அரசு விளக்கம்

Published On 2019-12-13 03:34 GMT   |   Update On 2019-12-13 03:34 GMT
புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பது ஏன்? என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் வினியோகிக்க கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜனதாவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன் பிரச்சினை எழுப்பினார்.



இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது. அது நமது தேசிய மலர். அதுபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News