செய்திகள்
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ்சை கொளுத்திய போராட்டக்காரர்கள்

வங்காளதேசம் வெளியுறவுத்துறை மந்திரியின் இந்திய வருகை ரத்து

Published On 2019-12-12 10:11 GMT   |   Update On 2019-12-12 17:06 GMT
குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாக, வங்காளதேசத்தின் வெளியுறவுத் துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.

குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாக, வங்காளதேசத்தின் வெளியுறவுத் துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News