செய்திகள்
பெண்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்

Published On 2019-12-08 21:41 GMT   |   Update On 2019-12-08 21:41 GMT
இந்தியாவின் 18 மிகப்பெரிய நகரங்களில் சென்னை, கோவை நகரங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் 18 மிகப்பெரிய நகரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களின் நகரங்களில் அதிக குற்றங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. அதேநேரம் சென்னை மற்றும் கோவையை பொறுத்தவரை கொலை, சொத்து தொடர்பான குற்றங்கள், தலித் பிரிவினர் மீதான வன்முறை போன்ற சம்பவங்கள் குறைவாகவே உள்ளன. இதைப்போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான நகரங்களாக விளங்குகின்றன.

டெல்லியை பொறுத்தவரை 1 லட்சம் பேருக்கு 1,050 குற்றங்கள் வீதம் கணக்கிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கையை பாட்னா நகரம் மிஞ்சி விடுகிறது. அங்கு 1,712 குற்றங்கள் கணக்கிடப்பட்டு இருக்கிறது. டெல்லியை போல பெங்களூரு நகரமும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்தூர் நகரம் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News