செய்திகள்
ரூ. 2000 நோட்டு

இந்தியாவில் மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையா?

Published On 2019-11-29 10:23 GMT   |   Update On 2019-11-29 10:23 GMT
இந்தியாவில் மீண்டும் மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வாட்ஸ்அப் தகவல் வைரலாகியுள்ளது.



வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவும் குறுந்தகவல் ஒன்று இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 31, 2019 முதல் மதிப்பு நீக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2019 முதல் ரூ. 2000 நோட்டுக்கள் மதிப்பு நீக்கப்பட்டு, ஜனவரி 1, 2020 முதல் புதிய ரூ. 1000 நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்திருப்பதாக வாட்ஸ்அப் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



வாட்ஸ்அப்பில் வைரலாகும் குறுந்தகவல்களின் உண்மைதானா என ஆய்வு செய்ததில், மத்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் பற்றி எவ்வித தகவலும் வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ரூ. 2000 நோட்டுக்கள் தொடர்ந்து பயன்பாட்டில் தான் இருக்கும்.

முன்னதாக இந்தியாவில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிதாக ரூ. 2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ. 2000 நோட்டு மதிப்பு நீக்கம் செய்யப்படுவது போன்ற தகவல்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News