செய்திகள்
ஆன்லைன் வீடியோ

ஆன்லைன் வீடியோ பார்ப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் இந்தியர்கள் - ஆய்வில் தகவல்

Published On 2019-11-05 23:57 GMT   |   Update On 2019-11-05 23:57 GMT
ஆன்லைன் வீடியோக்களில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

‘லைம் லைட் நெட்வொர்க்ஸ்’ என்ற நிறுவனம், ஆன்லைன் வீடியோக்களின் நிலை என்ற பெயரில் ஆய்வு நடத்தியது. இதில் ஆன்லைன் வீடியோக்களில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆய்வில், “இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 8 மணி நேரம் 33 நிமிடங்கள் ஆன்லைன் வீடியோவுக்காக செலவழிப்பது” தெரியவந்துள்ளது. இது சர்வதேச அளவில் சராசரியான 6 மணி நேரம் 48 நிமிடங்கள் என்ற அளவைவிட 1 மணி நேரம் 45 நிமிடங்கள் அதிகம். இதன் மூலம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியை இந்தியர்கள் முறியடித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியர்கள் ஆன்லைன் வீடியோக்களுக்கு செலவழிக்கும் நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக இருந்தது.

ஆன்லைன் வீடியோக்கள் இலவசமாக வழங்கப்பட்டால் 84.8 சதவீதம் இந்தியர்கள் அதனை உடனே பார்க்கின்றனர். அதேபோல் ஆன்லைன் வீடியோக்களை இந்தியர்கள் வீட்டிலேயே அதிகமாக பார்க்கின்றனர். வீடு இல்லாவிட்டால் பயணத்தின்போது காண்பதாக, இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
Tags:    

Similar News