செய்திகள்
தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி

தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி- ஆசியான் மாநாட்டில் பங்கேற்பு

Published On 2019-11-02 04:53 GMT   |   Update On 2019-11-02 04:53 GMT
இந்தியா-ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி:

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தின்போது பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன் ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.



நாளை நடைபெறும் இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வின்போது பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
Tags:    

Similar News