செய்திகள்
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் முகமது யூனுஸ்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனருக்கு பிடிவாரண்டு

Published On 2019-10-10 22:41 GMT   |   Update On 2019-10-10 22:41 GMT
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ் என்பவருக்கு டாக்கா நீதிமன்றம், பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது.
டாக்கா:

வங்காளதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ், பொருளாதார வல்லுனர். 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சிறந்த தொழில் முனைவோர், வங்கியாளர் என்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரர்.

கிராமீன் என்ற வங்கியின் மூலம் சிறு, குறு கடன்களை அறிமுகப்படுத்தி பல தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளார். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை டாக்கா நீதிமன்றம், இவருக்கு ஒரு பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது.

இதுபற்றி நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, “முகமது யூனுஸ் நடத்தும் கிராமீன் வங்கியில் தொழிற்சங்கத்தை உருவாக்கிய அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் விசாரணைக்கு வர இயலவில்லை. அவருக்கு பதிலாக வங்கியின் நிர்வாக செயல் தலைவர் மற்றும் மூத்த மேலாளர் ஆஜரானார்கள்” என்றார். மேலும் இதுகுறித்து முகமது யூனுசின் வழக்கறிஞர் கூறுகையில், “சம்மன் வருவதற்கு முன்பே அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்தவுடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
Tags:    

Similar News