செய்திகள்
படேல் சிலையை வணங்கும் தேவே கவுடா

குஜராத் சர்தார் படேல் சிலையை பார்வையிட்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா

Published On 2019-10-06 02:50 GMT   |   Update On 2019-10-06 02:50 GMT
குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை முன்னாள் பிரதமர் தேவே கவுடா பார்வையிட்டார்.
அகமதாபாத்:
 
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது இந்த சிலை.

சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். எனினும் 

இந்நிலையில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமாகிய தேவே கவுடா குஜராத் மாநிலம் சென்றார். அங்கு சர்தார் சரோவர் நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.



கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்தார் படேல் சிலையை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் யாரும் இதுவரை பார்வையிடவில்லையே ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News