செய்திகள்
ஜெகதீஷ் ஷெட்டர்

நாடு முழுவதும் இந்தி மொழியை கற்பது தவறு அல்ல: ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து

Published On 2019-09-16 02:02 GMT   |   Update On 2019-09-16 02:02 GMT
இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. நாடு முழுவதும் தொடர்பு மொழி வேண்டும் என்பதால், மத்திய அரசு இந்தியை ஊக்குவிக்கிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி :

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய தொழில்துறை மந்திரியுமான ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மொழி இருக்க வேண்டும். இந்த நோக்கத்தில் நமது நாட்டிலும் இந்தி மொழியை கற்பது தவறு அல்ல. இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. நாடு முழுவதும் தொடர்பு மொழி வேண்டும் என்பதால், மத்திய அரசு இந்தியை ஊக்குவிக்கிறது. வங்கி தேர்வில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு. இதுபற்றி மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தையும் சேர்ப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தனது இலாகா தொடர்பான விஷயங்களுக்காக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி டெல்லிக்கு சென்றுள்ளார். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். 
Tags:    

Similar News