செய்திகள்
ஊர்மிளா மடோன்கர்

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

Published On 2019-09-10 09:59 GMT   |   Update On 2019-09-10 09:59 GMT
காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் இன்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை:

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(45). ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து உறுதி செய்தார்.
 
இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை கடந்த மார்ச் 27ம் தேதி சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.



ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் மூலம் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News