செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்

டி.கே.சிவக்குமார் கைது எதிரொலி- கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் தீவிர போராட்டம்

Published On 2019-09-04 07:27 GMT   |   Update On 2019-09-04 07:27 GMT
கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார். இவர் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். இவரை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகம் முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி காங்கிரசார் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதேபோல் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள், சில பகுதிகளில் முழு அடைப்பு போரட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ராமநகர, சென்னபட்டனா உள்ளிட்ட முக்கிய நகரிங்களில் உள்ள சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.

போராட்டக்காரர்கள் தாக்கியதில் 16 அரசு பேருந்துகள் சேதமடைந்துள்ளன. ஒரு பேருந்து முற்றிலும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

டி.கே.சிவக்குமாரின் கனகபுரா சட்டமன்றத் தொகுதி, ராமநகர மாவட்டத்தில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News