செய்திகள்
நடனம் ஆடியபடி கற்பிக்கும் தலைமை ஆசிரியர்

பாடம் சொல்லிக் கொடுப்பதில் புது யுக்தி... மாணவர்களை கவர்ந்த டான்சிங் டீச்சர்..

Published On 2019-08-27 05:51 GMT   |   Update On 2019-08-27 06:03 GMT
ஒடிசா மாநிலம் அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது.
கோராபுட்:

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம், லம்தாபுத் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரியும் பிரபுல்லா குமார் பதி (வயது 56), மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் புதிய யுக்தியை பயன்படுத்துகிறார்.

மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், நடனம் மற்றும் இசை வடிவில் பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார். ‘டான்சிங் சார்’ என்று மாணவர்களாலும் பெற்றோராலும் அழைக்கப்படும் தலைமை ஆசிரியரின் இந்த பணி அனைவரையும் கவர்ந்துள்ளது.

பாட்டு பாடி, நடனம் ஆடியபடி வேடிக்கையுடன் பாடம் சொல்லிக் கொடுப்பதை மாணவர்கள் விரும்புவதாகவும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் அதிக விருப்பம் காட்டுவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர்.

இந்த தனித்துவமான கற்பித்தல் முறையை 2008ம் ஆண்டில் இருந்து அவர் பின்பற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது. பலர் அவரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News