செய்திகள்
ரிசர்வ் வங்கி

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

Published On 2019-08-26 22:01 GMT   |   Update On 2019-08-26 22:01 GMT
ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத்தொகை ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத்தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது.

இதை ரிசர்வ் வங்கி வாரியம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசுக்கு ரூ.1,76,051 கோடியை வழங்க மத்திய வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1,23,414 கோடி 2018-19-ம் ஆண்டுக்கான உபரி இருப்புத்தொகை ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News